இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

பாராலிம்பிக் தீம் பாடலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் வெளியிட்டார்

Posted On: 03 AUG 2021 4:10PM by PIB Chennai

கர் தே கமால் துஎனும் இந்திய பாராலிம்பிக் (மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்) அணிக்கான தீம் பாடலை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் புதுதில்லியில் இன்று வெளியிட்டார்

 

செயலாளர் (விளையாட்டு) திரு ரவி மிட்டல், இணை செயலாளர் (விளையாட்டு) திரு எல் எஸ் சிங், இந்திய பாராலிம்பிக் குழுவின் தலைவர் டாக்டர் தீபா மாலிக், தலைமைச் செயலாளர் திரு குருசரண் சிங் மற்றும் தலைமைப் புரவலர் திரு அவினாஷ் ராய் கண்ணா ஆகியோர் காணொலி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

லக்னோவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரான சஞ்சீவ் சிங்கால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட இப்பாடல், விளையாட்டு வீரர்கள் மட்டுமில்லாது, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய திரு அனுராக் தாக்கூர், “ஒன்பது பிரிவுகளில் 54 மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் என இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அணியை டோக்கியோவில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அனுப்புகிறது. விளையாட்டில் உங்களது ஒவ்வொரு அசைவையும் நாடு கவனிக்கும். 130 கோடி இந்தியர்கள் உங்களுக்கு ஊக்கமளிப்பதற்காக உள்ளனர் என்பதை விளையாடும் போது நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். உங்களது சிறப்பான பங்களிப்பை நீங்கள் வழங்குவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

தாம் இசையமைத்து பாடிய பாடல் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புவதாக திரு சஞ்சீவ் சிங் கூறினார். “வாழ்க்கையில் ஏற்கனவே வெற்றியாளர்களாக விளங்கும் நீங்கள், வெல்லப்போகும் பதக்கங்களின் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்,” என்றார்.

இந்திய பாராலிம்பிக் குழுவின் தலைவர் டாக்டர் தீபா மாலிக் பேசுகையில், “இந்திய பாராலிம்பிக் குழுவின் தலைவர் மற்றும் விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தை கொண்டாடும் தேசிய குழுவின் உறுப்பினர் என்ற முறையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியமான அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியா@75-க்கு சிறகுகள் அளிக்கும் முயற்சியாக இந்த பாடலை கருதுகிறேன். வெகு குறுகிய காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ளன,” என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741863

----



(Release ID: 1742066) Visitor Counter : 188