பிரதமர் அலுவலகம்

டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக பி வி சிந்துவுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 01 AUG 2021 6:45PM by PIB Chennai

டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக பி வி சிந்துவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிந்து இந்தியாவின் பெருமை என்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக்  வீராங்கனைகளில் அவரும் ஒருவர் என்றும் பிரதமர் கூறினார்.

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், "பி வி சிந்துவின் மிகச்சிறந்த செயல்பாட்டால் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி. டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவர் இந்தியாவின் பெருமை மற்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக்  வீராங்கனைகளில் ஒருவர்," என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****************


(रिलीज़ आईडी: 1741307) आगंतुक पटल : 338
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada