பிரதமர் அலுவலகம்
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவிற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
29 JUL 2021 4:54PM by PIB Chennai
நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல்மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் மைல்கல் முடிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
தொடர் சுட்டுரைச் செய்திகளில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ/ பல் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மைல்கல் முடிவை நமது அரசு எடுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் சிறந்த வாய்ப்புகளைப் பெறவும், நம் நாட்டில் சமூக நீதிக்கான புதிய முன்னுதாரணத்தை உருவாக்கவும் இது பெருமளவு உதவிகரமாக இருக்கும்.”
*****************
(Release ID: 1740386)
Visitor Counter : 291
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam