பிரதமர் அலுவலகம்
பாரபங்கி சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUL 2021 9:40AM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். இது தொடர்பாக முதல்வர் யோகி அவர்களுடன் பேசினேன். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, பாரபங்கியில் ஏற்பட்ட மோசமான சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயையும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயையும் கருணைத் தொகையாக பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்துள்ளார்” என்று கூறியுள்ளது.
•••••
(வெளியீட்டு அடையாள எண்: 1739747)
வருகையாளர் எண்ணிக்கை : 289
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam