இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறது இந்திய விளையாட்டு வீரர்களின் முதல் அணி: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் மற்றும் இணையமைச்சர் திரு நிசித் பிரமணிக் ஆகியோர் வழியனுப்புகின்றனர்
Posted On:
17 JUL 2021 3:15PM by PIB Chennai
டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளதால், இந்தியாவில் இருந்து டோக்கியோ செல்லும், முதல் விளையாட்டு வீரர்கள் அணியை முறைப்படி வழியனுப்பும் நிகழ்ச்சி புதுதில்லி, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று நடைப்பெறவுள்ளது.
54 விளையாட்டு வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதிகள் உட்பட 88 பேர் கொண்ட அணியினரை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர் திரு நிசித் பிரமணிக் ஆகியோர் முறைப்படி வழியனுப்புகின்றனர். இந்த வழியனுப்பு விழாவில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் திரு நரேந்தர் துருவ் பத்ரா, பொதுச் செயலாளர் திரு ராஜீவ் மேத்தா மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குனர் திரு சந்தீப் பிரதான் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
வில் அம்பு, ஈட்டி எறிதல், ஹாக்கி, பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் பளுதூக்குதல் ஆகிய 8 போட்டிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் புதுதில்லியிலிருந்து இன்று புறப்படுகின்றனர். இதில் மிகப் பெரிய அணி ஹாக்கி.
விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து பிரமுகர்களுக்கும் கொவிட் பரிசோதனை செய்து கொள்வர். சமூக இடைவெளி முறைகளும் இந்நிகழ்ச்சியில் பின்பற்றப்படும்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, 127 இந்திய விளையாட்டு வீரர்கள், தகுதி பெற்றுள்ளனர். ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றவர்களை விட இவர்கள் அதிகம் என்பதால், இந்த எண்ணிக்கை சாதனையாக உள்ளது.
======
(Release ID: 1736416)
Visitor Counter : 266