மத்திய அமைச்சரவை
மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்தலை ஆய்வு செய்ய அரசமைப்பின் 340-வது பிரிவின் படி அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் கால அவகாசத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
14 JUL 2021 4:05PM by PIB Chennai
மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்தலை ஆய்வு செய்ய அரசமைப்பின் 340-வது பிரிவின் படி அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் கால அவகாசத்தை 11-வது முறையாக நீட்டிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 2021 ஜூலை 31 முதல் 2022 ஜனவரி 31 வரை ஆறு மாத காலத்திற்கு ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்படும்.
பயன்:
கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதன் மூலம், பல்வேறு பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைக்கு பிறகு ஆணையத்தால் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க முடியும்
செயல்பாட்டு பட்டியல்:
2021 ஜூலை 31 முதல் 2022 ஜனவரி 31 வரை ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் கால அவகாசம் தொடர்பான உத்தரவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் வெளியிடப்படும்.
*****************
(Release ID: 1735449)
Visitor Counter : 335
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam