பிரதமர் அலுவலகம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள குழுவினரிடம் காணொலி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 13 JUL 2021 7:42PM by PIB Chennai

உங்களுடன் உரையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்எனினும், நான் உங்கள் ஒவ்வொருவருடனும் பேச முடியவில்லை, உங்களது ஆர்வம் மற்றும் உற்சாகத்தை, இந்த நாட்டு மக்கள் அறிவார்கள்மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர், இந்த நிகழ்ச்சியில் என்னுடன் பங்கேற்றுள்ளார்அதேபோன்று, சில நாட்களுக்கு முன்பு வரை, உங்கள் அனைவருடனும் பணியாற்றி வந்த, அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரும், தற்போதைய சட்டத்துறை அமைச்சருமான திரு.கிரண் ரிஜிஜு-வும் இருக்கிறார்அமைச்சர்களில் மிகவும் இளையவருமான விளையாட்டுத்துறை இணையமைச்சருமான திரு.நிஷித் பிரமானிக்-கும் நம்மிடையே இருக்கிறார்.   அனைத்து விளையாட்டு அமைப்புகளின் தலைமை நிர்வாகிகள், உறுப்பினர்கள், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள எனதருமை சகாக்கள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர்களே, இன்று நாம் காணொலி வாயிலாக உரையாடி வருகிறோம், எனினும், நான் உங்கள் அனைவரையும் தில்லியில் உள்ள எனது இல்லத்தில் நேரில் சந்தித்து இருக்க வேண்டும்.   இதற்கு முன்பு நான் அப்படித்தான் செய்திருக்கிறேன்என்னைப் பொறுத்தவரை, அத்தகைய சந்திப்பு தான் நேசம் மிகுந்ததாக இருக்கும்ஆனால், கொரோனா தொற்று காரணமாக இம்முறை அது சாத்தியப்படவில்லை.   அதற்கும் மேலாக, நமது வீரர்களின் சரிபாதிக்கும் மேற்பட்டோர், ஏற்கனவே வெளிநாடுகளில் பயிற்சியில் உள்ளனர்.  எனினும், நீங்கள் திரும்பி வரும்போது, நிச்சயமாக நான் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.   கொரோனா அனைத்தையும் மாற்றிவிட்டதுஒலிம்பிக் போட்டி நடைபெறும் ஆண்டே மாறிவிட்டது, நீங்கள் தயாராகும் விதமும் மாறிவிட்டதுஏராளமான அம்சங்கள் மாறிவிட்டனதற்போது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.   டோக்கியோவிலும் நீங்கள் முற்றிலும் மாறுபட்ட சூழலைக் காண இருக்கிறீர்கள்

நண்பர்களே,

உங்களுடனான இந்த கலந்துரையாடலின் மூலம்நெருக்கடியான கால கட்டத்திலும், இந்த நாட்டிற்காகநீங்கள் எந்தளவிற்கு வியர்வைசிந்தி, கடினமாக உழைத்து வருகிறீர்கள் என்பதை நாடு அறிந்து கொண்டிருக்கும்எனது கடந்தமனதின் குரல்’  நிகழ்ச்சியின் போது, உங்களது கடின உழைப்பு குறித்து நான் விவாதித்தேன்உங்களது மன வலிமையை ஊக்குவிக்கும் விதமாக, உங்களை உற்சாகப்படுத்தும்படி, நாட்டு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.   தற்போது, இந்த நாடே உங்களை வாழ்த்துவதை நான் காண்கிறேன்அண்மையில்,  ‘Cheer for India’  என்ற ஹேஸ்டேக்குகளை நான் பார்த்தேன்.   சமூக ஊடகங்கள் முதல் இந்த நாட்டின் மூலை முடுக்குகள் வரை, ஒட்டுமொத்த நாடும் உங்களை ஆதரிக்கிறது.   விளையாட்டு அரங்கத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, 135 கோடி இந்திய மக்களின்  நல்வாழ்த்துகளும் உங்களுக்கு உண்டு.   நானும், எனது பங்கிற்கு நீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.   நாட்டுமக்கள் உங்களுக்கு தெரிவிக்கும் வாழ்த்துகளை அறிந்துகொள்ள நமோ செயலியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுமக்கள் அனைவரும் உங்களை வாழ்த்துவதற்காக, நமோ செயலியைப் பயன்படுத்துகின்றனர்

 

நண்பர்களே,

நாட்டுமக்கள் அனைவரின் உணர்வுகளும் உங்களுடன் இருக்கும்நான் உங்கள் அனைவரையும் மொத்தமாக காணும்போது, மனஉறுதி, தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வ எண்ணங்கள் பிரதிபலித்ததை அறிந்துகொள்ள முடிந்தது.   உங்களுக்கு கடமை உணர்வும், போட்டித் தன்மையும் இருக்கிறது.   இந்த நற்பண்புகள் அனைத்தும் புதிய இந்தியாவையே சாரும்.   உங்களில் சிலர், நாட்டின் தென் மாநிலங்கள், வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.   சிலர், தங்களது கிராமத்துக் களங்களிலிருந்து விளையாட்டுக்களைத் தொடங்கியவர்கள்.   சிலர், குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்சி அமைப்புகள் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள்.   ஆனால் தற்போது, நீங்கள் அனைவரும்இந்திய அணி‘-யின் அங்கமாக இருக்கிறீர்கள்நீங்கள் அனைவரும் நாட்டிற்காக விளையாட இருக்கிறீர்கள்.   இந்த பன்முகத்தன்மை, அணி ஒற்றுமை,  ‘ ஒரே பாரதம் உன்னத பாரதம்‘  என்பதன் அடையாளமாகத் திகழ்கிறது

நண்பர்களே,

ஒட்டுமொத்த நாடும், ஒவ்வொரு வீரர்களுடனும், புதிய சிந்தனை மற்றும் புதிய அணுகுமுறையுடன் இணைந்திருப்பதை நீங்கள் காண முடியும்இன்று நீங்கள் வெளிப்படுத்தும் முயற்சிகள் நாட்டிற்கு மிகவும் அவசியம் ஆகும்.  

எனதருமை நண்பர்களே,

நாட்டிற்காக வியர்வை சிந்தி நீங்கள் பாடுபட்டு வருகிறீர்கள், தேசியக் கொடி ஏந்திச் செல்ல இருக்கிறீர்கள், எனவே, இந்த நாடே உங்களுக்கு ஆதரவாக இருப்பது நாட்டின் கடமை ஆகும்.   உங்களுக்கு சிறந்த பயிற்சி முகாம்கள், சிறந்த விளையாட்டு உபகரணங்களை வழங்க நாங்கள் முயற்சித்திருக்கிறோம்குறுகிய காலத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன

 

நண்பர்களே,

விளையாட்டு மைதானத்தில், சரியான வழிமுறையுடன் நீங்கள் வெளிப்படுத்தும் கடின உழைப்புவெற்றியை உறுதிசெய்யும்.   ‘கேலோ இந்தியா‘  மற்றும்  ‘ஃபிட் இந்தியா‘   இயக்கங்களை நடத்தியிருக்கிறோம்.   முதன்முறையாக, தற்போது அதிக வீரர்கள் (இந்தியாவிலிருந்துஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.   அதேபோன்று, ஏராளமான இந்திய வீரர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர்பல பிரிவுகளில், இந்தியா முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது

நண்பர்களே,

நாம் பயிற்சிபெற்று, முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பது நம்நாட்டு வழக்கமாக உள்ளது.   நீங்கள் அனைவரும் நீண்டகாலமாகவே வெற்றிக்காக பயிற்சி பெற்றிருக்கிறீர்கள்.    வெற்றி என்பது, புதிய இந்தியாவின் வழக்கம் என்பதை மெய்ப்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.   இது ஒரு தொடக்கம் தான்.   நீங்கள் டோக்கியோ சென்று, இந்திய தேசியக் கொடியை பறக்கவிடும்போது, ஒட்டுமொத்த உலகமும் அதனைப் பார்க்கும்.   அதே வேளையில், வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி ஏதும் உங்களுக்கு இல்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.    என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை, உங்கள் மனதிற்கொள்ள வேண்டும்.   இந்தியாவிற்காக வாழ்த்துங்கள் என்று நாட்டு மக்களை மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.    நீங்கள் அனைவரும் நாட்டிற்காக சிறப்பாக விளையாடி, நாட்டின் பெருமையை உயர்த்துவதுடன், புதிய உச்சத்தை அடைவீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளதுஎனது நல்வாழ்த்துகள், உங்களது குடும்பத்தினருக்கும் எனது சிறப்பான வாழ்த்துகள்! நன்றிகள் பல.  

குறிப்பு  :  இது, பிரதமர் உரையின்  தோராய மொழிபெயர்ப்புதான்மூல உரை இந்தியில் உள்ளது

                                                  *****



(Release ID: 1735336) Visitor Counter : 195