இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் இந்திய அணியின் கலந்து கொள்ளுதல்/தயார்நிலையை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்திற்கு திரு அனுராக் தாகூர் தலைமை வகித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 JUL 2021 5:05PM by PIB Chennai

டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் இந்திய அணியின் கலந்து கொள்ளுதல்/தயார்நிலையை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட குழுவின் ஏழாவது கூட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் திரு நிஷித் பரமாணிக் உடன் இருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கான உலகத்தர பயிற்சி மற்றும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

#Cheer4India பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்தும் ஜூலை 13 அன்று மாலை 5 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் வீரர்களின் உரையாடல் குறித்தும் அதிகாரிகளுடன் திரு அனுராக் சிங் தாகூர் ஆலோசித்தார்.

எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக இந்த உரையாடல் நடைபெற இருக்கிறது. தூர்தர்ஷன் மற்றும் அரசின் பல்வேறு சமூக ஊடக தளங்களில் இந்த உரையாடல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1734827) வருகையாளர் எண்ணிக்கை : 262
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam