பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்

பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகை அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 12 JUL 2021 12:14PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையையும் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து துயருற்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் கருணைத் தொகையாக வழங்கப்படும்: பிரதமர் திரு மோடி”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1734754) வருகையாளர் எண்ணிக்கை : 281