குடியரசுத் தலைவர் செயலகம்
பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் மாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUL 2021 1:13PM by PIB Chennai
இந்திய குடியரசு தலைவர், கீழ்க்காணும் நியமனங்கள்/ மாற்றங்களை அறிவித்துள்ளார்.
I. மிசோரம் ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை, கோவா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
II. ஹரியானா ஆளுநர் திரு சத்யதேவ் நாராயண் ஆர்யா, திரிபுரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
III. திரிபுரா ஆளுநர் திரு ரமேஷ் பெய்ஸ், ஜார்கண்ட் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
IV. திரு தாவர்சந்த் கெலாட், கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
V. இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரயா, ஹரியானா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
VI. மிசோரம் ஆளுநராக டாக்டர் ஹரி பாபு கம்பம்படி நியமிக்கப்பட்டுள்ளார்.
VII. மத்தியப் பிரதேச ஆளுநராக திரு மங்குபாய் சக்கன்பாய் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
VIII. இமாச்சலப் பிரதேச ஆளுநராக திரு ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் குறிப்பிட்ட நியமனங்கள், அவர்கள் தத்தமது பொறுப்புகளை ஏற்கும் நாள் முதல் அமலுக்கு வரும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733051
*******
(Release ID: 1733051)
(வெளியீட்டு அடையாள எண்: 1733089)
வருகையாளர் எண்ணிக்கை : 490