பிரதமர் அலுவலகம்
அமெரிக்காவின் 245-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUL 2021 2:36PM by PIB Chennai
அமெரிக்கா நாட்டின் 245-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் மேதகு ஜோ பைடன் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “245-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். துடிப்பான ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் அமெரிக்காவும் சுதந்திரம் மற்றும் விடுதலையின் மாண்புகளை பகிர்கின்றன.
நமது கேந்திர கூட்டணி, உண்மையான சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது”, என்று கூறியுள்ளார்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1732619)
வருகையாளர் எண்ணிக்கை : 341
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Odia
,
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam