மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கல்வி பிளஸ் (யுடிஐஎஸ்இ +) 2019-20க்கான ஐக்கிய மாவட்ட தகவல் அமைப்பு குறித்த அறிக்கை: மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டார்
Posted On:
01 JUL 2021 1:27PM by PIB Chennai
கல்வி பிளஸ் (யுடிஐஎஸ்இ +) 2019-20-க்கான ஐக்கிய மாவட்ட தகவல் அமைப்பு குறித்த அறிக்கையை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று வெளியிட்டார். இது நாட்டில் உள்ள பள்ளிக் கல்வி நிலவரத்தை தெரிவிக்கிறது.
இந்த கல்வி பிளஸ் அறிக்கையின்படி, 2019-20ம் ஆண்டில், பள்ளி கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் அனைத்து நிலைகளிலும் அதிகரித்துள்ளது. மாணவர்-ஆசிரியர் விகிதமும் மேம்பட்டுள்ளது.
2019-20ம் ஆண்டில், ஆரம்ப கல்வி முதல் மேல் நிலை கல்வி வரை மாணவிகள் சேர்க்கை 12.08 கோடிக்கு அதிகமாக உள்ளது. 2018-19ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 14.08 லட்சம் பேர் அதிகமாக சேர்ந்துள்ளனர். இது கணிசமான உயர்வு.
2012-13 மற்றும் 2019-20ம் ஆண்டுக்கு இடையே உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் பாலின சமநிலை அட்டவணை மேம்பட்டுள்ளது.
2019-20ம் ஆண்டில் பல பள்ளிகளில், மின்சாரம், கம்ப்யூட்டர்கள், இணையதளம் ஆகியவற்றின் செயல்பாடு முந்தைய ஆண்டைவிட அதிகரித்துள்ளது.
மற்றொரு முக்கிய முன்னேற்றமாக, பல பள்ளிகளில் கை கழுவும் வசதி காணப்படுகிறது. 2019-20ம் ஆண்டில், 90 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் கை கழுவும் வசதி உள்ளது. இது கடந்த 2012-13ம் ஆண்டில் 36.3 சதவீதமாக இருந்தது.
இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:
https://www.education.gov.in/hi/statistics-new?shs%20term%20node%20tid%20depth%20=394&Apply=Apply
-----
(Release ID: 1731912)
Visitor Counter : 286