கலாசாரத்துறை அமைச்சகம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கலைப் பொருட்கள் தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகத்தின் விளக்கம்

Posted On: 27 JUN 2021 8:42PM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கலைப்பொருட்கள் காணாமல் போனதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு அரங்கில் இந்தாண்டு ஜனவரி 23ம் தேதி ஒரு  கண்காட்சி தொடங்கப்பட்டது எனவும், அங்கு இந்த கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன என்றும்   மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த கலைப் பொருட்கள் செங்கோட்டை அருங்காட்சியகத்திலிருந்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால்  கடனாக பெறப்பட்டு, கொல்கத்தா விக்டோரியா நினைவு அரங்கத்துக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக இந்த இரு அமைப்புகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது 6 மாதம் செல்லத்தக்கது மற்றும் மேலும் ஓராண்டு வரை நீட்டிக்கத்தக்கது

இந்த கலைப்பொருட்கள் முறையான பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுடன் கொல்கத்தா அனுப்பப்பட்டன. அருங்காட்சியகங்களுக்கு இடையே பழங்கால கலைப் பொருட்களை கடனாக பெற்று காட்சிக்கு வைப்பது தொடர்ந்து மேற்கொள்ளும் ஓர் நடைமுறை. இந்த விஷயத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் விக்டோரியா நினைவு அரங்கம் ஆகியவை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


(Release ID: 1730774) Visitor Counter : 260