ஆயுஷ்
சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் விதமாக 800 இடங்களில் சிறப்பு தபால் தலை முத்திரையை இந்திய தபால் துறை வெளியிடவுள்ளது
Posted On:
19 JUN 2021 2:46PM by PIB Chennai
ஜூன் 21 அன்று கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் விதமாக சிறப்பு தபால் தலை முத்திரை ஒன்றை இந்திய தபால் துறை வெளியிடவுள்ளது. பட வடிவமைப்புடன் கூடிய இந்த சிறப்பு தபால் தலை முத்திரை நாடு முழுவதும் உள்ள 810 தலைமை தபால் அலுவலகங்களில் வெளியிடப்படும்.
2021 ஜூன் 21 அன்று பதிவு செய்யப்படும் அனைத்து கடிதங்களிலும் இந்த முத்திரையை தலைமை தபால் அலுவலகங்கள் பதிக்கும். இதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சர்வதேச யோகா தினம் 2021 என்று பொறிக்கப்பட்டிருக்கும். இத்தகைய முத்திரைகளுக்கு தபால் தலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்புள்ளது.
தபால் தலை சேகரிப்பு மீதான ஆர்வம் சமீப ஆண்டுகளாக குறைந்து வரும் காரணத்தால், இதற்கு புத்தாக்கம் வழங்குவதற்கான திட்டம் ஒன்றை இந்திய தபால் துறை செயல்படுத்துகிறது. அவர்களுக்கான தபால் தலைகளை குறிப்பிட்ட தபால் தலை சேமிப்பு அலுவலகங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், நாட்டில் உள்ள எந்த தலைமை தபால் அலுவலகத்திலும் ரூ 200 செலுத்தி தபால் தலை சேமிப்பாளர் கணக்கு தொடங்க முடியும். சிறப்பு தபால் முத்திரைகள் தபால் தலை சேமிப்பு அலுவலகங்கள் அல்லது தபால் தலை சேமிப்பாளர் கணக்கு கவுன்டர்களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பிட்ட அளவே அவை அச்சிடப் படுகின்றன.
800-க்கும் அதிகமான தபால் அலுவலகங்களில் இந்த முத்திரை நிகழ்ச்சி நடைபெறுவதால், இதன் மூலம் நாட்டில் தபால் தலை சேகரிப்பு ஆர்வம் மீண்டும் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728519
*****************
(Release ID: 1728609)