உள்துறை அமைச்சகம்

வெள்ள நிலவரத்தை எதிர்கொள்வதற்கான நாட்டின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நடத்தினார்

Posted On: 15 JUN 2021 8:14PM by PIB Chennai

வெள்ள நிலவரத்தை எதிர்கொள்வதற்கான நாட்டின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று நடத்தினார். இந்திய வானிலை துறை, ஜல் சக்தி அமைச்சகம், மத்திய நீர் ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் நிவாரண படை ஆகியவற்றுக்கிடையேயான ஒத்துழைப்புக்காக புதிய அமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

நீண்டகாலமாக நாட்டில் நிலவி வரும் வெள்ளம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரிவான மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வுக்கான கொள்கையை வகுப்பதற்கான நீண்டகால நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார்.

வெள்ளத்தையும், நாட்டின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் அளவு உயர்வதையும் முன்கூட்டியே கணிப்பதற்கான நிரந்தர அமைப்பை ஏற்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில முகமைகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து பணியாற்றுமாறு அதிகாரிகளுக்குக் அவர் அறிவுறுத்தினார்.

அணைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், வெள்ள கட்டுப்பாட்டிற்கும் உதவும் வகையில் பெரிய அணைகளை தூர் வாருவதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு ஜல் சக்தி அமைச்சகத்தை திரு அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

இந்திய வானிலை துறை மற்றும் மத்திய நீர் ஆணையம் போன்ற சிறப்புமிக்க அமைப்புகள் வானிலை மற்றும் வெள்ளத்தை முன்கூட்டியே இன்னும் துல்லியமாக கணிப்பதற்காக் நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

மின்னல் தாக்குதல்கள் குறித்து தொலைக்காட்சி, பண்பலை வனொலி, குறுந்தகவல் மற்றும் இதர வழிகளின் மூலம் மக்களுக்கு விரைந்து எச்சரிக்கை விடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உமாங்க், ரெயின் அலார்ம் மற்றும் தாமினி போன்ற வானிலை முன்னறிவிப்பு குறித்த கைபேசி செயலிகள் தொடர்புடைய மக்களை சென்றடைவதற்காக அவை குறித்த அதிகபட்ச விளம்பரம் செய்யப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மின்னல் தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை மூன்று மணி நேரத்திற்கு முன்பே தாமினி செயலி வழங்குவதல், உயிர் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்படும்/

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727334

 

-----



(Release ID: 1727366) Visitor Counter : 236