பிரதமர் அலுவலகம்
பிரபல பொருளாதார வல்லுனரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பேராசிரியர் ராதாமோகனின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
11 JUN 2021 11:00AM by PIB Chennai
பிரபல பொருளாதார வல்லுனரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பேராசிரியர் ராதாமோகன் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் "பேராசிரியர் ராதாமோகன் அவர்கள், விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். குறிப்பாக. நிலையான மற்றும் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றினார். பொருளாதாரம் மற்றும் சூழலியல் தொடர்பான பாடங்களில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அறிவுக்காக மதிக்கப்பட்டார். அவரது மறைவை அறிந்து துயருற்றேன்.. அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று கூறியுள்ளார்.
******************
(रिलीज़ आईडी: 1726194)
आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada