மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

2019-20-ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கை வெளியீடு

Posted On: 10 JUN 2021 2:14PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால்நிஷாங்க்’, 2019-20 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி  ஆய்வின் அறிக்கையை வெளியிட இன்று அனுமதி அளித்தார்.

நாட்டில் உயர்கல்வியின் தற்போதைய நிலவரம் மீதான முக்கிய செயல்திறன் குறியீடுகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

2015-16 முதல் 2019-20 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை 11.4% வளர்ச்சியடைந்திருப்பதாக திரு பொக்ரியால் குறிப்பிட்டார்.இந்தக் காலக்கட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18.2% அதிகரித்தது.

இந்த அறிக்கை குறித்துப் பேசிய மத்திய கல்வி இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே, “நாட்டில் உயர் கல்வித்துறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட கொள்கைகளின் வெற்றியாக இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் அமைந்துள்ளன. நம் நாட்டில் உயர்கல்வித் துறையின் நிலையை மேம்படுத்த கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு இந்த அறிக்கை உதவிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்”, என்று கூறினார்.

2019-20 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி  ஆய்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

1.       கடந்த 2018-19 ஆம் ஆண்டு 3.74 கோடியாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை, 2019-20ஆம் ஆண்டில் 3.85 கோடியாக அதிகரித்து, 11.36 லட்சமாக (3.04%) வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டில் மொத்த மாணவர் சேர்க்கை 3.42 கோடியாக இருந்தது.

2.       ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம், 2019-20 ஆம் ஆண்டில் 27.1%ஆக உள்ளது. இது கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 26.3%ஆகவும், 2014-15 ஆம் ஆண்டில் 24.3%ஆகவும் இருந்தது.

3.       பாலின சமநிலை குறியீட்டின்படி உயர் கல்வித்துறையை அணுகுவதில் ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தனர். 2018-19-ஆம் ஆண்டு 1.00 ஆக இருந்த இந்தக் குறியீடு, 2019-20-ஆம் ஆண்டில் 1.01 ஆக அதிகரித்தது.

4.       2019-20 ஆம் ஆண்டில், உயர் கல்வியில் மாணவர்கள்-ஆசிரியர் விகிதாச்சாரம் 26 ஆக இருந்தது.

5.       2019-20-ஆம் ஆண்டில்:

பல்கலைக்கழகங்கள்: 1,043 (2%); கல்லூரிகள்: 42,343 (77%); தனித்து இயங்கும் நிறுவனங்கள்: 11,779 (21%)

6.       இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 3.38 கோடி மாணவர்கள் சேர்ந்தனர். இவர்களில் 85 சதவீதத்தினர் (2.85 கோடி), மனித வளம், அறிவியல், வணிகவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவ அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சார்ந்த படிப்புகளில் இணைந்தனர்.

7.       கடந்த 2014-15-ஆம் ஆண்டில் 1.17 லட்சமாக இருந்த முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2019-20-ஆம் ஆண்டில் 2.03 லட்சமாக உயர்ந்தது.

8.       மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 15,03,156 ஆகும். இவர்களில் ஆண்கள் 57.5%, பெண்கள் 42.5%.

முழுமையான ஆய்வறிக்கையைக் காண:https://www.education. gov.in/ sites/upload_files/mhrd/files/statistics-new/aishe_eng.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725914

-------


(Release ID: 1725985) Visitor Counter : 750