சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தொற்றின் அண்மை தகவல்

Posted On: 10 JUN 2021 9:46AM by PIB Chennai

60 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்திற்கும் கீழ் (11,67,952) சரிந்துள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 63,463 பேர் குறைந்துள்ளனர்.

நாட்டில் தினசரி கொவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை மூன்றாவது நாளாக, ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 94,052 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 1,51,367 பேர் குணமடைந்தனர்.

தொடர்ந்து 28-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 2,76,55,493 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தேசியளவில் குணமடைபவர்களின் வீதம் 94.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வாராந்திர தொற்று உறுதி வீதம் 5.43% ஆகும்.

தொடர்ந்து 17-வது நாளாக அன்றாட பாதிப்பு வீதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக, 4.69 சதவிகிதமாக  உள்ளது.

இதுவரை 37.21 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 24 கோடி (24,27,26,693) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725842

------



(Release ID: 1725938) Visitor Counter : 138