பிரதமர் அலுவலகம்

ஜூன் 4 ஆம் தேதி சி.எஸ்.ஐ.ஆர் சங்கத்தின் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை

Posted On: 03 JUN 2021 9:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 ஜூன் 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) சங்கத்தின் கூட்டத்திற்கு, காணொலி மூலம் தலைமை வகிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரும் கலந்து கொள்வார்.

இந்தச் சங்கம், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் ஒரு பகுதியாகும். இந்தியா முழுவதும் பரவியுள்ள 37 ஆய்வகங்கள் மற்றும் 39 மையங்கள் மூலம் இதன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புகழ்பெற்ற விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் மற்றும் அறிவியல் அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் ஆண்டுதோறும் சந்திக்கும் சங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.

                                                    ---------


(Release ID: 1724388) Visitor Counter : 174