சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்
प्रविष्टि तिथि:
04 JUN 2021 9:35AM by PIB Chennai
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் சிகிச்சை பெற்றவர்களில் 77,420 பேர் குறைந்ததால், தற்போது கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16,35,993-ஆக உள்ளது.
நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு 1.32 லட்சமாகியுள்ளது; அன்றாட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
நாட்டில் இதுவரை மொத்தம் 2.65 கோடி நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,07,071 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 22வது நாளாக, தினசரி குணமடைந்தோர் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பை விட அதிகமாக உள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 93.08 சதவீதமாக உள்ளது.
வாராந்திர பாதிப்பு வீதம் 7.27%
தினசரி கொவிட் பாதிப்பு விகிதம் 6.38 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 11 நாட்களாக இந்த அளவு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. கொவிட் பரிசோதனை அளவு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 35.7 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தேசியளவிலான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 22.41 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724287
----
(रिलीज़ आईडी: 1724372)
आगंतुक पटल : 224