சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தொடர்ந்து 7வது நாளாக கொவிட் தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் கீழ் குறைவு

Posted On: 03 JUN 2021 10:40AM by PIB Chennai

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,34,154  பேருக்கு புதிதாக கொவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 7வது நாளாக தினசரி கொவிட் பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. 

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 17,13,413- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 80,232 பேர் குறைந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம், நாட்டின் மொத்த பாதிப்பில் 6.02 சதவீதமாக உள்ளது. 
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பை விட தொடர்ந்து 21வது நாளாக அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,11,499 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம், 2,63,90,584 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களின் சதவீதம் 92.79. 

கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம்  21,59,873 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. நாட்டில் இதுவரை மொத்தம் 35.3 கோடி (35,37,82,648) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  

நாட்டில் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கு இன்று 22.10 கோடியை கடந்தது.  இன்று காலை 7 மணி வரை 31,24, 981 அமர்வுகள் மூலம் 22,10,43,693 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

மேலும் விவரங்களுக்கு: 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723955

(Release ID: 1723955)


(Release ID: 1724020) Visitor Counter : 273