சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்

Posted On: 30 MAY 2021 9:30AM by PIB Chennai

நாட்டில் தினசரி கொவிட்  பாதிப்பு மேலும் குறைந்து 1.65 லட்சமாகியுள்ளது.

தினசரி கொவிட் பாதிப்பு, கடந்த 46 நாட்களில் மிகக்குறைவு. கடந்த 4 மணி நேரத்தில் கொவிட் சிகிச்சை பெற்றவர்கள்  1,14,216 பேர் குறைந்ததால், தற்போது கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,14,508-ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தம் 2,54,54,320 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,76,309  பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 17வது நாளாக, தினசரி குணமடைந்தோர் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பை விட அதிகமாக உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 91.25 சதவீதமாக  உள்ளது.

வாராந்திர பாதிப்பு வீதம் 9.36%

தினசரி கொவிட் பாதிப்பு விகிதம் 8.02 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக இந்த அளவு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.  கொவிட் பரிசோதனை அளவு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 34.3 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தேசியளவிலான தடுப்பூசி திட்டத்தின் கீழ் 21.2 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 30.35 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

----


(Release ID: 1722908) Visitor Counter : 167