நிதி அமைச்சகம்

அவசரகால கடன் உத்திரவாத திட்டம் (இசிஎல்ஜிஎஸ்) விரிவுபடுத்தப்பட்டது: ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க புதிய திட்டம்

Posted On: 30 MAY 2021 11:37AM by PIB Chennai

கொவிட் இரண்டாம் அலை, பல துறைகளில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், அவசர கால கடன் உத்திரவாத திட்டத்தை மத்திய அரசு  மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

1. இசிஎல்ஜிஎஸ் 4.0: மருத்துவமனைகள்/ மருத்துவ கல்லூரிகள் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க 7.5 சதவீத வட்டியில் ரூ.2 கோடி வரை 100 சதவீத உத்தரவாதத்துடன் கடன் பெற முடியும்;

2.  ரிசர்வ் வங்கி கடந்த மே 5ம் தேதி வெளியிட்ட வழிகாட்டுதல்கள் படி, இசிஎல்ஜிஎஸ் 1.0 திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள், 4 ஆண்டுகளுக்கு பதில் 5 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்தலாம். இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியை மட்டும் செலுத்தி, 3 ஆண்டுகளுக்கு அசல் மற்றும் வட்டியை சேர்த்து செலுத்த முடியும்.

3. ரிசர்வ் வங்கி  மே 5ம் தேதி வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படிமறுசீரமைப்போடு இணைந்து, .சி.எல்.ஜி.எஸ் 1.0 இன் கீழ் கடன் பெற்றவர்கள்பிப்ரவரி 29, 2020 நிலவரப்படி நிலுவையில் 10% வரை கூடுதல் கடன் உதவி பெறலாம்.

4. இசிஎல்ஜிஎஸ் 3.0 திட்டத்தின் கீழ் தற்போதைய நிலுவை கடன் உச்ச வரம்பு ரூ.500 கோடி நீக்கப்படவுள்ளது. கடன் பெற்றவர்களுக்கான அதிகபட்ச கூடுதல் இசிஎல்ஜிஎஸ் கடன் உதவி 40 சதவீதம் அல்லது ரூ.200 கோடி இதில் எது குறைவோ அது வரையறுக்கப்பட்டுள்ளது.

5.  இசிஎல்ஜிஎஸ் 3.0 திட்டத்தின் கீழ் கடன் பெற சிவில் விமான போக்குவரத்து துறை தகுதி பெறவேண்டும்.

6. இசிஎல்ஜிஎஸ் கடன் திட்ட காலம் 30.09.2021 வரை  அல்லது ரூ.3 லட்சம் கோடிக்கான உத்திரவாதம் வெளியிடப்படும் வரை  இருக்கும்இத்திட்டத்தின் கீழ் 31.12.2021 வரை கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த இசிஎல்ஜிஎஸ் திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றம் மூலம், இசிஎல்ஜிஎஸ் பயன்பாடு மற்றும் பலன் அதிகரிக்கும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும். வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்.

இந்த மாற்றங்கள், நிறுவனங்களின் கடன் வசதியையும் அதிகரிக்கும். இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தால் (NCGTC) தனியாக வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722846

 

-----


(Release ID: 1722905) Visitor Counter : 383