பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி- பிரான்ஸ் அதிபர் மேதகு இமானுவல் மேக்ரான் தொலைபேசி உரையாடல்

प्रविष्टि तिथि: 26 MAY 2021 8:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் மேதகு இமானுவல் மேக்ரானுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

கொவிட் தொற்றுக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவு அளித்ததற்காக அதிபர் திரு மேக்ரானுக்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார். இருதரப்பு, பிராந்திய மற்றும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் சர்வதேச விஷயங்கள் குறித்து விவாதித்த தலைவர்கள், அண்மையில் நிறைவடைந்த இந்திய- ஐக்கிய ஐரோப்பிய தலைவர்கள் கூட்டத்தின் நேர்மறை விளைவுகளுக்கு திருப்தி தெரிவித்தனர். சமமான மற்றும் விரிவான தடையில்லா வர்த்தகத்தை மீண்டும் மேற்கொள்வது தொடர்பான பேச்சுக்கள், முதலீட்டு ஒப்பந்தங்கள், இந்திய-ஐக்கிய ஐரோப்பிய இணைப்புக் கூட்டணி போன்ற நடவடிக்கைகளை வரவேற்பு முயற்சிகளாக இருவரும் ஒப்புக்கொண்டனர்.

சமீப ஆண்டுகளில் இந்திய-பிரான்ஸ் கேந்திர கூட்டணி அடைந்துள்ள வலிமை தொடர்பாக இரு நாடுகளின் தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, கொவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்திலும் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்தனர்.

நிலைமை சீரான பிறகு இந்தியாவிற்கு வருமாறு அதிபர் திரு மேக்ரானுக்கு பிரதமர் திரு மோடி மீண்டும் அழைப்பு விடுத்தார்.

*****************


(रिलीज़ आईडी: 1722110) आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam