ரெயில்வே அமைச்சகம்

கொவிட் சவால்களுக்கு மத்தியிலும், சரக்கு போக்குவரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை பராமரிக்கிறது இந்திய ரயில்வே

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2021 2:57PM by PIB Chennai

கொவிட் சவால்களுக்கு மத்தியிலும், சரக்கு போக்குவரத்தில் இந்திய ரயில்வே, இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டுள்ளது.

ரயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவு கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

2021-22ம் நிதியாண்டில் இதுவரை இந்திய ரயில்வே, 203.88 மில்லியன் டன் சரக்குகளை கொண்டு சென்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரயில்வே 184.88 மெட்ரிக் டன் சரக்குகளை மட்டுமே கையாண்டது

2021 மே மாதத்தில் இந்திய ரயில்வே 92.29 மெட்ரிக் டன் சரக்குகளை கொண்டு சென்றுள்ளது. இது 2019ம் ஆண்டு மே மாதத்தில் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவைவிட (83.84 மெட்ரிக் டன்) 10 சதவீதம் அதிகம் மற்றும் 2020ம் ஆண்டு கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவைவிட (64.61) 43 சதவீதம் அதிகம்

2021 மே மாதத்தில், இந்திய ரயில்வே சரக்கு போக்குவரத்து மூலம், ரூ.9278.95 கோடி வருவாய் ஈட்டியது.

ரயில்கள் மூலம் சரக்குகளை விநியோகிக்கும் காலமும் 4.83 நாட்களாக பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டு மே மாதம் 6.61 நாட்களாக இருந்தது.

கொவிட்-19 தொற்றை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி,இந்திய ரயில்வே தனது ஒட்டுமொத்த செயல் திறனை அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721864

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1721910) வருகையாளர் எண்ணிக்கை : 269
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu , Kannada , Malayalam