நிதி அமைச்சகம்

வருமானவரி தாக்கல் தேதி நீட்டிப்பு: கொவிட் தொற்றை முன்னிட்டு, சில காலவரம்புகளை மத்திய அரசு நீட்டித்துள்ளது

Posted On: 20 MAY 2021 6:22PM by PIB Chennai

கடும் கொவிட் தொற்றை முன்னிட்டு பல தரப்பினரிடம் வந்த வேண்டுகோள்களை பரிசீலித்த, மத்திய அரசுவருமான வரி சட்டம் 1961-ன் கீழ் உள்ள இணக்கங்கள் சிலவற்றுக்கு கால அவகாசங்களை நீட்டிக்க முடிவு செய்துள்ளது

1. 2020-21ம் நிதியாண்டுக்கான நிதி பரிவர்த்தனைகளின் அறிக்கை (SFT), வருமானவரி சட்ட விதிமுறைகள் 1962- 114இ பிரிவின் கீழ்,  2021 மே 31ம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும். அதன்படி  வெளியிடப்பட்ட பல அறிவிப்புகளை 2021 ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக வழங்கலாம்

2.  2020ம் ஆண்டுக்கு தெரிவிக்க வேண்டிய கணக்கு அறிக்கை, விதிமுறைப்படி 2021 மே 31ம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும். அதை 2021 ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக வழங்கலாம்;

3. வருமான வரி 31ஏ விதிமுறைப்படி, 2020-21ம் நிதியாண்டின் கடைசி காலாண்டு வரிப்பிடித்தம் அறிக்கை 2021 மே 31ம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும். அவற்றை 2021 ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக வழங்கலாம்;

4. 31வது விதிமுறைப்படி, படிவம் எண்.16-ல், வேலை செய்யும் இடத்தில் வரி பிடித்தத்துக்கான சான்றிதழ் தொழிலாளிக்கு 2021 ஜூன் 15ம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும். அதை 2021 ஜூலை 15ம் தேதிக்கு முன்பாக வழங்கலாம்

5. 30, 37 சிஏ விதிமுறைகள் படிபடிவம் எண் 24ஜி-ல் டிடிஎஸ்/டிசிஎஸ் புத்தகம் சரிசெய்தல் அறிக்கை, 2021 ஜூன் 15ம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும். அவற்றை 2021 ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக வழங்கலாம்;

6. 33வது விதிமுறையின் கீழ், 2020-21ம் நிதியாண்டுக்கு, அறங்காவலர்களால் செலுத்தப்பட்ட  அனுமதிக்கப்பட்ட வயது முதிர்வு தொகையிலிருந்து  வரிபிடித்தத்துக்கான அறிக்கை 2021 மே 31ம் தேதிக்கு முன்பாக அனுப்ப வேண்டும். அதை 2021 ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக அனுப்பலாம்.

7. 12 சிபி விதிமுறைப்படி 2020-21ம் ஆண்டுக்கு படிவம் எண் 64டி-ல் முதலீட்டு நிறுவனத்தால் அதன் பங்குதாருருக்கு செலுத்தப்பட்ட வருமான அறிக்கை 2021 ஜூன் 15ம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும். அதை 2021 ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக வழங்கலாம்;

8. 12 சிபி விதிமுறைகள் படி, 2020-21ம் நிதியாண்டுக்கு படிவம் 64சி-ல் ஒரு முதலீட்டு நிறுவனத்தால், அதன் பங்குதாரருக்கு செலுத்தப்பட்ட வருமான அறிக்கை 2021 ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும். அதை 2021 ஜூலை 15ம் தேதிக்கு முன்பாக வழங்கலாம்

9. வருமான வரிச்சட்டத்தின் 139 பிரிவின் 1வது துணைப் பிரிவின் படி, 2021-22ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான தேதி 2021 ஜூலை 31. அது தற்போது 2021 செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்பட்டுள்ளது;

10. வருமானவரி சட்டப்படி 2020-21ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வழங்கப்பட வேண்டிய தேதி 2021 செப்டம்பர் 30. அது தற்போது 2021 அக்டோபர் 31ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது;

11. 92இ பிரிவின் படி 2020-21ம் நிதியாண்டுக்கான  தனி நபரின் சர்வதேச பரிமாற்றம் அல்லது உள்நாட்டு பரிமாற்றத்துக்கான கணக்கு அறிக்கை  வழங்க வேண்டிய கடைசி தேதி 2021 அக்டோபர் 31. இது தற்போது 2021 நவம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது;

12.  வருமானவரி சட்டத்தின் 139வது பிரிவின், 1வது துணைப்பிரிவின் படி 2021-22 மதிப்பீட்டு ஆண்டின் வருமான வரி கணக்கு தாக்கல் தேதி 2021 அக்டோர் 31. அது 2021 நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது;

13: வருமானவரி சட்டத்தின் 139வது பிரிவின், 1வது துணைப்பிரிவின் படி 2021-22 மதிப்பீட்டு ஆண்டின் வருமான வரி கணக்கு தாக்கல் தேதி 2021 நவம்பர் 30. இது 2021 டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது;

14.  வருமானவரி சட்டத்தின் 139வது பிரிவின் 4 மற்றும் 5வது துணைப் பிரிவின் கீழ்  2021-22ம் ஆண்டுக்கான தாமத / மாற்றியமைக்கப்பட்ட வருமானவரி கணக்கு தாக்கலுக்கான கடைசி தேதி 2021 டிசம்பர் 31. அது 2022 ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலேயுள்ள 9, 12, 13 உட் பிரிவுகளில்    குறிப்பிடப்பட்ட கால அவகாச நீட்டிப்பு, வருமானவரி சட்டத்தின் 1 முதல் 234ஏ பிரிவுகளின் விளக்கத்துக்கு பொருந்தாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.     மேலும், இந்தியாவில் உள்ள தனிநபர் வருமானவரி சட்டத்தின் 140ஏ பிரிவின் கீழ் செலுத்தப்பட்ட வரி (கால அவகாசம் இல்லாமல்)  முன்கூட்டியே செலுத்தப்பட்ட வரியாக  (அட்வான்ஸ் டாக்ஸ்) கருதப்படும். 

நேரடிவரி வாரியத்தில் சுற்றறிக்கை எண். 9/2021 in F.No.225/49/2021/ITA-II    20.05.2021ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.  இந்த சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720357

*****************



(Release ID: 1720422) Visitor Counter : 358