சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக ஆறு மாத புதுமையான திட்டத்தை அரசு தொடங்கியது
Posted On:
19 MAY 2021 3:40PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக ஆறு மாத கால, சமுதாய அடிப்படையிலான ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை அரசு தொடங்கியது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் தாவர்சந்த் கெலோட் காணொலி மூலம் இதனை தொடங்கி வைத்தார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு கிருஷன் பால் குர்ஜார், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் திரு பாரி ஓ'ஃபரேல், ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் திரு மன்பிரீத் வோரா, மத்திய மாற்றுத்தறனாளிகளுக்கான துறையின் செயலாளர்
திருமிகு அஞ்சலி பாவ்ரா, மெல்போர்ன் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரங்கன் மஸ்கெல், மாற்றுத்திறனாளிகளுக்கான துறையின் இணை செயலாளர் திரு பிரபோத் சேத் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் நாதன் கில்ஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் தாவர்சந்த் கெலோட், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முன்னுரிமையாக மாற்றுத்திறனாளிகள் எப்போதுமே இருந்துள்ளார்கள் என்றும் இனி எப்போதும் இருப்பார்கள் என்றும் உறுதியளித்தார்.
குறைபாடுகள் உள்ள நபர்களை உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்காக ஊனமுற்றோர் உரிமை சட்டம் 2016-ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள புதுமையான திட்டத்தின் கீழ், பாதிப்புறக்கூடியவர்களை அடையாளம் காணும்
பயிற்சி மிக்க நபர்கள் உருவாக்கப்பட்டு, அருகில் உள்ள மையங்கள் குறித்து பெற்றோர்கள்/ காப்பாளர்களுக்கு
தகவல் அளிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத் திட்டங்களின் பலன்களை அடைவதற்கு அவர்களுக்கு வழி காட்டப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய திரு குர்ஜார், சிறந்த நடைமுறைகளை இதர நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள நமது அரசு தயாராக உள்ளது என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான துறையில் ஆஸ்திரேலியாவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த பயணத்தில் ஒரு மைல்கல் என்றும் தெரிவித்தார்.
பயிற்சித் திட்டத்தின் ஆறு புத்தகங்கள் இந்த விழாவின்போது வெளியிடப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரச்சனைகளை
எதிர்கொள்வதிலும் அவர்களை சமுதாயத்துடன் இணைப்பதிலும் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உடன் இணைந்து பணியாற்ற கூடிய அடிமட்ட அளவு மறுவாழ்வு பணியாளர்களை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளுக்கிடையே மாற்று திறனாளிகள் துறையில் ஒத்துழைப்புக்காக 2018 நவம்பர் 22 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய மறுவாழ்வுக் குழு மற்றும் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தால் இப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய மறுவாழ்வுக் குழுவின் கீழ் இயங்கும் மறுவாழ்வு தேர்வுகளுக்கான தேசிய வாரியம் தேர்வுகளை நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு ttps://pib.gov.in/ PressReleasePage.aspx? PRID=1719914 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்
-----
(Release ID: 1720000)
Visitor Counter : 310