ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பெருந்தொற்றுக்கு மத்தியிலும், ஊரக மேம்பாட்டில் இந்தியா புதிய இலக்குகளை எட்டியது: பிரதமரின் கிராம வீட்டு வசதி திட்டத்தில் ரூ.5854 கோடி செலவு

Posted On: 17 MAY 2021 4:02PM by PIB Chennai

கொவிட் தொற்றின் 2ம் அலை காரணமாக, இந்தியாவின் ஊரக பகுதிகள் கடுமையாக பாதித்தாலும், நாடு முழுவதும் வளர்ச்சி பணிகள் பாதிக்க கூடாது என்பதை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் உறுதி செய்தது. இந்த கால கட்டத்தில் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் பல திட்டங்களில் விரைவான முன்னேற்றங்கள்  ஏற்பட்டன. வளர்ச்சிப் பணிகளை தவிர, கிராமங்களில் கொவிட்-19 நிலைமையை சமாளிக்க புதிய நபர்களுக்கு மாநிலம், மாவட்டம், வட்டார அளவில் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பயிற்சி அளித்தது. 

கொவிட் தொற்று இருந்த போதும், இந்த மே மாதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 1.85 கோடி பேருக்கு வேலை அளிக்கப்பட்டது. இது கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் அளிக்கப்பட்ட வேலையை விட 52 சதவீதம் அதிகம்.

நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், பெண்களுக்கு சுயஉதவி குழுக்கள் மூலம், 2021 நிதியாண்டில், ரூ.56 கோடி சுழற்சி நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக அளிக்கப்பட்டது. இது 2020ம் நிதியாண்டில் ரூ.32 கோடியாக இருந்தது. 

 பிரதமரின் கிராம வீட்டு வசதி திட்டம் - இத்திட்டம் இதர ஊரக மேம்பாட்டு திட்டங்களை போல் கொவிட் தொற்றால் கடும் பாதிப்படைந்தது. ஆனாலும், ஒழுங்குபடுத்தப்பட்ட பணிமுறைகள் காரணமாக, இந்த நிதியாண்டில் இத்திட்டத்துக்

கு ரூ.5,854 கோடி செலவிடப்படவுள்ளது. இது கடந்த 2020-21ம் நிதியாண்டில் ரூ.2512 கோடியாகவும், 2019-20ம் ஆண்டில் ரூ.1411 கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719326

*****************




(Release ID: 1719368) Visitor Counter : 300