சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் மேலாண்மைக்கான சர்வதேச சமூகத்தின் உதவிகளை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உரிய காலத்தில் முறையாக விநியோகிக்கிறது மத்திய அரசு

Posted On: 13 MAY 2021 11:53AM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச சமூகம் அளித்துவரும் உதவிகளில், தங்களது உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இதுவரை 9,284 பிராணவாயு செறிவூட்டிகள், 7,033 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 5,933 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 3.44 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை மத்திய அரசு விநியோகித்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில் மூன்றாவது கட்டம் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 17.72 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 25,70,537 முகாம்களில் 17,72,14,256 தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 19 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசித் திட்டத்தின் 117-வது நாளன்று (மே 12, 2021) 18,94,991 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கொவிட் தொற்றிலிருந்து நம் நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1,97,34,823 ஆக பதிவாகியுள்ளது. தேசிய அளவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 83.26 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,52,181 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக குணமடைந்தவர்களில் 72.90 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

தேசிய உயிரிழப்பு வீதம், தற்போது 1.09 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,120 உயிரிழப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 74.30 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 816 பேரும், அதை தொடர்ந்து கர்நாடகாவில் 516 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718217

*****************(Release ID: 1718273) Visitor Counter : 217