சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் மேலாண்மைக்கு சர்வதேச நாடுகளின் உதவியை மத்திய அரசு விரைவாக பகிர்வது, மாநிலங்கள் முழுவதும் மருத்துவ சிகிச்சையை வலுப்படுத்தியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAY 2021 2:53PM by PIB Chennai

கொவிட் சவால்களை எதிர்கொள்ள, உலக நாடுகள், இந்தியாவுக்கு நல்லெண்ண உணர்வுடன் உதவிகள் அளித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல், சர்வதேச நாடுகளின் நன்கொடையாக ஆக்ஸிஜன் டேங்கர்கள் உட்பட கொவிட் நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன

இவற்றை மாநிலங்களுக்கு விரைவாக விநியோகிப்பதில் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

மொத்தம், 9,284 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 7033 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், 5,933 வென்டிலேட்டர்கள், 3.44 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள், போன்றவை, கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை சாலை மார்க்கமாகவும், வான்வழியாவும் அனுப்பப்பட்டுள்ளன.

இங்கிலாந்து, எகிப்து, குவைத் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து கடந்த மே 11ம் தேதி வந்த முக்கிய பொருட்கள்

* ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்: 80

* ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்: 1590

* வென்டிலேட்டர்கள் : 20

இவற்றை உடனடியாக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வதை கண்காணிக்க பிரத்தியேக பிரிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717923

----


(வெளியீட்டு அடையாள எண்: 1718097) வருகையாளர் எண்ணிக்கை : 294
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam