எரிசக்தி அமைச்சகம்
ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 24 மணி நேரமும் மின்விநியோகம்: மின்சார அமைச்சகம் நடவடிக்கை
Posted On:
12 MAY 2021 11:57AM by PIB Chennai
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை முன்னிட்டு, நாட்டில் உள்ள 73 ஆக்ஸிஜன் ஆலைகளில் மின் விநியோகத்தை, மின்சார அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இவற்றில் 13 ஆலைகள், தேசிய தலைநகர் மண்டலத்துக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கின்றன. இவற்றுக்கு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க கீழ்கண்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:
மின்துறை செயலாளர் தினசரி ஆய்வு: ஆக்ஸிஜன் ஆலைகளுக்கான மின் விநியோக நிலவரம் குறித்து மின்துறை அமைச்சக செயலாளர், அனைத்து மாநில மின்துறை செயலாளர்கள், மின் பகிர்வு நிறுவனமான பொசோகோவின் தலைமை நிர்வாக இயக்குனர் அளவில் தினசரி ஆய்வு நடத்தப்படுகிறது. ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 24 மணி நேர மின்சார தொடர்பான அனைத்து பிரச்னைகளும் தினசரி ஆய்வு கூட்டத்தில் அடிக்கடி விவாதிக்கப்படுகின்றன.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: ஆக்ஸிஜன் ஆலைகளில் 24 மணிநேர மின்சாரத்தை உறுதி செய்ய, ஊரக மின்மயமாக்க நிறுவனத்தில் (ஆர்இசி) 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை, கட்டுப்பாட்டு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள், ஆக்ஸிஜன் ஆலைகளின் சிறப்பு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பர்.
தடுப்பு நடவடிக்கைகள்: ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு மின்சார விநியோகிக்கும் பாதைகளில் சிறப்பான முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பரோதிவாலா ஆக்ஸிஜன் ஆலை, கேரள கனிம மற்றும் உலோக ஆலை ஆகியவற்றில் மின்சார விநியோகிக்கும் கருவிகளை மாற்றியமைப்பது உட்பட பல நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சலேகி ஆக்ஸிஜன் ஆலையில் பறவைகளால் மின் விநியோக பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, 132 கிலோ வாட் திறனில், தரைக்கு கீழ் கேபிள்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் விநியோகத்துக்கான தொழில்நுட்ப தணிக்கை மற்றும் தீர்வு நடவடிக்கைகளை திறம்பட அமல்படுத்துதல்:
▪ இந்த தொழில்நுட்ப தணிக்கை பணியை பொசோகோ நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த அறிக்கை அடிப்படையில், ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு தடையற்ற மின் விநியோகத்துக்கு தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பல மாநிலங்களுக்கு மின்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. மீதமுள்ள ஆலைகளில் தொழில்நுட்ப தணிக்கை பணி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717861
-----
(Release ID: 1717930)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam