சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
14 ஆக்ஸிஜன் ஆலைகள் மற்றும் 3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் உட்பட வெளிநாட்டு நன்கொடைகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டன
Posted On:
09 MAY 2021 12:01PM by PIB Chennai
கொவிட் 2வது அலையில், இந்தியா சந்திக்கும் சவால்களுக்கு உதவ உலக நாடுகள் உதவிக் கரம் நீட்டிவருகின்றன. இந்த உலகளாவிய உதவிகளை, மாநிலங்கள்/யூனியன் பிரசேதங்களுக்கு திறம்பட ஒதுக்கீடு செய்வதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.
இதுவரை 6,608 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 3,856 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 14 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள், 4,330 வென்டிலேட்டர்கள் / பி பாப் / சி பாப் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான ரெம்டெசிவிர் குப்பிகள் மாநிலங்கள் / யூனியன் பிரதேங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன..
நாட்டில் கொவிட் 19 தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16.94 கோடியை கடந்து விட்டது.
இன்று 18 முதல் 44 வயதுக்கு உட்பட 2,94,912 பயனாளிகள், கொவிட் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 17, 84,869 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தடுப்பூசி போடத் தொடங்கியதின் 113-வது நாளான நேற்று, 20,23,532 தடுப்பூசிகள் போடப்பட்டன.
நாட்டில் கொவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,83,17,404-ஆக உள்ளது. இவர்களின் சதவீதம் 82.15. கடந்த 24 மணி நேரத்தில் 3, 86,444 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 4,03,738 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 56,578 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 30.22 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 37,36,648. இவர்கள் மொத்த பாதிப்பில் 16.76 சதவீதம். சிகிச்சை பெறுவர்களில் 82.94 சதவீதம் பேர் 13 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
தேசிய அளவிலான இறப்பு வீதம் 1.09 சதவீதம் என்ற அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 74.93 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக 864 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717184
****************
(Release ID: 1717231)
Visitor Counter : 257