சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

யுடிஐடி இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்குவது கட்டாயம்: ஜூன் 1ம் தேதி முதல் அமல்

Posted On: 06 MAY 2021 2:50PM by PIB Chennai

யுடிஐடி (தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாளம்) இணையதளம் மூலமாக மட்டுமே மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்குவதை கட்டாயமாக்கும் அரசு அறிவிப்பாணையை (Gazette notification SO 1736(E))   மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துத்துறை நேற்று வெளியிட்டுள்ளது. இது 01.06.2021ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விஷயம் குறித்து மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சர் தலைமையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய ஆலோசனை வாரியம் கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழை கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஆன்லைன் மூலம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.

ஆனால், சில மாநிலங்களில் நடந்த தேர்தல்களை முன்னிட்டு, ஆன்லைன் மூலம் சான்றிதழ் வழங்குவது 01.06.2021 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பின்பற்றுவதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன்களை கவனிக்கும் துறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 

இந்த யுடிஐடி திட்டம் 2016ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த யுடிஐடி இணையளத்தில் www.swavlambancard.gov.in) பணியாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரசேங்களின் அதிகாரிகளுக்கு, மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டுத்துறை பயிற்சி அளித்துள்ளது. ஆன்லைன் முறைக்கு மாற, மாநிலங்கள்/யூனியன் பிரசேத்ஙகளுக்கு போதிய அவகாசமும் வழங்கப்பட்டுள்ளன.

*******************



(Release ID: 1716502) Visitor Counter : 266