பிரதமர் அலுவலகம்

தடுப்பூசி மருந்து வீணாவதை குறைத்ததற்காக, சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 05 MAY 2021 12:53PM by PIB Chennai

கொரோனா தடுப்பூசி மருந்து வீணாவதை குறைக்க, முன்மாதிரியை ஏற்படுத்தியதற்காக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

கேரள முதல்வர் பினராயி விஜயன் விடுத்த சுட்டுரையை மேற்கோள்காட்டி, பிரதமர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது: 

‘‘தடுப்பூசி மருந்து வீணாவதை குறைக்க நமது சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தியுள்ளது நல்ல விஷயம். கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில், தடுப்பூசி மருந்து வீணாவதை குறைப்பது மிகவும்  முக்கியமானது.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


***************(Release ID: 1716168) Visitor Counter : 7