மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஆன்லைன் தேர்வு தவிர, 2021 மே மாதம் நடைபெறவிருக்கும் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு

Posted On: 03 MAY 2021 7:20PM by PIB Chennai

கொவிட்-19 இரண்டாம் அலையை முன்னிட்டு, 2021 மே மாதம் நடைபெறவிருக்கும் அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்குமாறு கல்வித்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு நிதியுதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கும், மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் திரு அமித் காரே எழுதியுள்ள கடிதத்தில், 2021 மே மாதம்  நடத்த திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

 ஆனால், ஆன்லைன் தேர்வுகளை தொடரலாம்.

இந்த முடிவு 2021 ஜூன் முதல் வாரம் மறுபரிசீலனை செய்யப்படும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனத்தில் யாருக்காவது எந்த உதவி தேவைப்பட்டாலும், அது உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. அப்போதுதான் அவர்கள் கொவிட் தொற்றில் இருந்து விரைவில் வெளிவரமுடியும். தகுதியானவர்கள் அனைவரையும் கொவிட் தடுப்பூசி போடவும், அனைவரும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

------



(Release ID: 1715764) Visitor Counter : 152