பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மேதகு உர்சுலா வான் டெர் லேயன் இடையே தொலைப்பேசி உரையாடல்

Posted On: 03 MAY 2021 2:09PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியுடன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மேதகு உர்சுலா வான் டெர் லேயன் தொலைப்பேசியில் பேசினார்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலவும் தற்போதை கொவிட் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்

கொவிட்-19 இரண்டாம் அலைக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் மற்றும் அதன் உறுப்பு நாடுகளும் உடனடியாக உதவியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான உத்திக் கூட்டாண்மைகடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த உச்சி மாநாட்டில் இருந்து புதுப்பிக்கப்பட்ட ஊக்குவிப்பைக் கண்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர்.

2021 மே 8ம் தேதி, காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ள இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டம், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஏற்கனவே நிலவும் பன்முக உறவில், புதுப்பிக்கப்பட்ட ஊக்குவிப்பை வழங்குவதில் முக்கியமான வாய்ப்பாக இருக்கும் என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.  

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டம்,  ஐரோப்பிய ஒன்றியத்தின் +27 அமைப்பின்  முதல் கூட்டமாக இருக்கும் மற்றும் இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தி கூட்டாண்மையை  மேலும் வலுப்படுத்துவதில், இரு தரப்பிலும் பகிரப்பட்ட லட்சியத்தையும் பிரதிபலிக்கிறது.

--------(Release ID: 1715678) Visitor Counter : 1