சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் மாபெரும் தடுப்பூசித் திட்டம்: மொத்த எண்ணிக்கை 15.68 கோடியைக் கடந்தது

प्रविष्टि तिथि: 02 MAY 2021 10:29AM by PIB Chennai

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும்  திட்டத்தின் மூன்றாவது கட்டம் நேற்று தொடங்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் இதுவரை 15.68 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மூன்றாவது கட்டத்தில் தமிழகம் (527 பயனாளிகள்) உள்ளிட்ட 11 மாநிலங்களில் 18-44 வயது வரையில் 86,023 பயனாளிகளுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று வழங்கப்பட்டது.

இன்று (மே 2, 2021) காலை 7 மணி வரை நாடு முழுவதிலும் உள்ள 22,93,911 முகாம்களில் 15,68,16,031 பயனாளிகளுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் 18 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.

106-வது நாளான நேற்று (மே 1, 2021), நாடு முழுவதும் 18,26,219 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,59,92,271 ஆக (81.77%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,07,865 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,92,488 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தில்லிகர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான்ஆகிய பத்து மாநிலங்களில் மட்டும் 72.72 விழுக்காடு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 63,282 பேரும், கர்நாடகாவில் 40,990 பேரும், கேரளாவில் 35,636 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 33,49,644 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 17.13 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,689 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.10 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715478

-------


(रिलीज़ आईडी: 1715503) आगंतुक पटल : 299
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam