வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தனி நபர் பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளின் இறக்குமதி, விலக்களிக்கப்பட்ட பிரிவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
01 MAY 2021 1:00PM by PIB Chennai
தனி நபர் பயன்பாட்டிற்கான பிராணவாயு செறிவூட்டிகளின் இறக்குமதியை, விலக்களிக்கப்பட்ட பிரிவு பட்டியலில் அரசு சேர்த்துள்ளது.
2021 ஜூலை 31 வரை இந்த விலக்கு அமலில் இருக்கும்.
இதன் மூலம், தனி நபர் பயன்பாட்டிற்கான பிராணவாயு செறிவூட்டிகளின் இறக்குமதியை தபால், கொரியர் அல்லது மின்னணு வணிக தளங்களின் மூலம் செய்துக் கொள்ளலாம்.
வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் வெளிநாட்டுப் வர்த்தக தலைமை இயக்குநரகம் 2021 ஏப்ரல் 30 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2015-20-ன் 2.25-வது பத்தி மேற்கண்ட காரணத்திற்காக திருத்தப்பட்டுள்ளது.
------
(रिलीज़ आईडी: 1715353)
आगंतुक पटल : 359