பிரதமர் அலுவலகம்

குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை


சிஸ் கஞ்ஜ் சாகிப் குருத்வாராவிலும் பிரதமர் பிரார்த்தனை

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAY 2021 8:49AM by PIB Chennai

குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரை வணங்கியுள்ளார்.

“400-வது பிறந்த நாள் என்ற சிறப்பான தருணத்தில் குரு தேக் பகதூர் அவர்களை நான் வணங்குகிறேன். அவரது துணிச்சலுக்கும், அடித்தட்டு மக்களுக்கு ஆற்றிய சேவைகளுக்கும் பரவலாக உலகம் முழுவதும் அவர் போற்றப்படுகிறார். கொடுங்கோல் மற்றும் அநீதிக்கு அவர் தலைவணங்க மறுத்தார். அவரது உயரிய தியாகம், ஏராளமானோருக்கு வலிமையையும், ஊக்க சக்தியையும் தருகிறது”, என்று பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சிஸ் கஞ்ஜ் சாகிப்  குருத்வாராவிலும் பிரதமர் திரு மோடி இன்று பிரார்த்தனை செய்தார்.

-----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1715319) வருகையாளர் எண்ணிக்கை : 312