சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16.33 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது

Posted On: 30 APR 2021 12:23PM by PIB Chennai

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், அரசின் ஐந்து உத்திகளான பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, கொவிட் தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி  ஆகியவற்றில்  தடுப்பூசி மிக முக்கியமானது. கொவிட்-19 கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கு, பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

மத்திய அரசு இன்று காலை 8 மணி வரை, சுமார் 16.33 கோடி தடுப்பூசி டோஸ்களை (16,33,85,030), மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளதுஇவற்றில் வீணான டோஸ்கள் உட்பட 15,33,56,503 டோஸ்கள் காலியாகிவிட்டன.  

ஒரு கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசி டோஸ்கள் (1,00,28,527)  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடம் இன்னும்  உள்ளன.

அடுத்த மூன்று நாட்களில் சுமார் 20 லட்சம் (19,81,110) தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714999

******

(Release ID: 1714999)(Release ID: 1715092) Visitor Counter : 109