ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
நாளொன்றுக்கு சுமார் 50 மெட்ரிக் டன் பிராணவாயுவை உர நிறுவனங்கள் கொவிட் நோயாளிகளுக்கு வழங்கவிருக்கின்றன
Posted On:
28 APR 2021 11:47AM by PIB Chennai
உர ஆலைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 50 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயு, கொவிட் நோயாளிகளுக்கு விரைவில் கிடைக்கவுள்ளது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் வழி (தனி பொறுப்பு), ரசாயனம் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் இணை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொது, தனியார் மற்றும் கூட்டுறவு துறைகளைச் சேர்ந்த உர நிறுவனங்கள் தங்களது ஆலைகளில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.
உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தற்போதைய பிராணவாயு உற்பத்தி அளவை மாற்றியமைத்து பெருந்தொற்று சமயத்தில் உதவும் வகையில் மருத்துவ பிராணவாயுவை மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர், உர நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சரின் முன்முயற்சியை வரவேற்ற உர நிறுவனங்கள், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தின் சாராம்சம் பின்வருமாறு:
• இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (இஃப்கோ), குஜராத் மாநிலத்தில் உள்ள காலோல் ஆலையில் ஒரு மணி நேரத்திற்கு 200 கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட பிராணவாயு ஆலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. நாளொன்றுக்கு 33,000 கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்டதாக இந்த ஆலை இருக்கும்.
• குஜராத் மாநில உரங்கள் மற்றும் ரசாயனங்கள் (ஜிஎஸ்எஃப்சி) நிறுவனம், தனது ஆலைகளில் சிறு மாற்றங்களை மேற்கொண்டு திரவ பிராணவாயுவை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
• குஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உரங்கள் மற்றும் ரசாயனங்கள் (ஜிஎன்எஃப்சி) நிறுவனமும் மருத்துவ பயன்பாட்டிற்கான பிராணவாயுவை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
• ஜிஎஸ்எஃப்சி மற்றும் ஜிஎன்எஃப்சி நிறுவனங்கள் தங்களது பிராணவாயு உற்பத்தி அளவை மேம்படுத்தும் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன.
• இதர உர நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலைகளை நிறுவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714517
*****************
(Release ID: 1714654)
Visitor Counter : 239