ரெயில்வே அமைச்சகம்

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சென்ற மொத்த மருத்துவ ஆக்ஸிஜனின்அளவு நாளை காலை 450 மெட்ரிக் டன்களை கடக்கிறது

Posted On: 26 APR 2021 5:35PM by PIB Chennai

சில நாட்களுக்கு முன் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸின் முதல் ரயில், மும்பையிலிருந்து காலி ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை விசாகப்பட்டினம் கொண்டு சென்றது. அதன்பின்பு, 302 மெட்ரிக் டன்கள் ஆக்ஸிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சென்றது

மற்றொரு 154 மெட்ரிக் டன்கள் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் ரயிலில் சென்றுக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களுக்கு, உயிர் காக்கும் திரவ ஆக்ஸிஜனை கொண்டுச் செல்லும் சவாலை ரயில்வே ஏற்றுள்ளது.

4 டேங்கர்களுடன் சத்தீஸ்கரில் இருந்து சென்று கொண்டிருக்கும் ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று தில்லியை சென்றடையும்

மகாராஷ்டிரா மக்களுக்காக, குஜராத்தின் ராஜ்கோட்டிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் 3 டேங்கர்களை(44 மெட்ரிக் டன்கள்) இன்று மும்பைக்கு கொண்டுச் சென்றுள்ளது.

மற்றொரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜார்கண்டிலிருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதில் 5 டேங்கர் லாரிகளில் 90 மெட்ரிக் டன்கள் திரவ ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது. இது நாளை காலை லக்னோ சென்றடையும்.

மாநில அரசுகளின்  அனைத்து வேண்டுகோள்களையும் ஏற்று, ரயில்வே செயல்பட்டு வருகிறது. கூடுதல் ஆக்ஸிஜன் ரயில்களின் தேவைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ரயில்வே தொடர்பில் உள்ளது.

------



(Release ID: 1714177) Visitor Counter : 203