சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 12.38 கோடியை கடந்தது : கொவிட் போராளிகளுக்கு புதிய காப்பீடு பாலிசி

Posted On: 19 APR 2021 10:53AM by PIB Chennai

உலகின் மாபெரும் தடுப்பூசி நடவடிக்கையில் நம் நாட்டில் இதுவரை போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12.38 கோடியைக் கடந்தது.

இன்று காலை 7 மணி வரை, 12,38,52,566 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன.

தடுப்பூசி போடப்பட்டு 93வது நாளான நேற்று (18.04.2021) 12,30,007 தடுப்பூசிகள் போடப்பட்டன.

நாட்டின் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 78.58 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 68,631 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டது.

20 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 19,29,329-ஆக உள்ளது. இந்த அளவு நாட்டின் மொத்த பாதிப்பில் 12.81 சதவீமாக உள்ளது.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,29,53,821-ஆக உள்ளது. தேசிய அளவில் குணமடையும் விகிதம் 86 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 1,44,178 பேர் குணமடைந்துள்ளனர்.

தேசிய அளவில் கொவிட் உயிரிழப்பு தற்போது 1.19 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமரின் ஏழைகள் நலன் உதவித் திட்டம் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இது 2021 ஏப்ரல் 24ம் தேதி வரை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது.  கொவிட்-19-க்கு எதிராக போராடும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் கொவிட் பாதிப்பு காரணமாக இறந்தால், அவர்களின் குடும்ப நலனுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. இது கொரோனா போராளிகளின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பை அளித்துள்ளது.

இதுவரை 287 பேருக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஏழைகள் நலன் உதவித் திட்ட காப்பீடு பாலிசிகளின் உரிமை கோரல்கள் 2021 ஏப்ரல் 24ம் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும். அதன்பின், கொரோனா போராளிகளுக்கு புதிய காப்பீட்டு பாலிசி  அமலுக்கு வரும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712613

*****

(Release ID: 1712613)


(Release ID: 1712632) Visitor Counter : 249