பிரதமர் அலுவலகம்

ரைசினா பேச்சுவார்த்தை தொடக்க நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

Posted On: 13 APR 2021 8:33PM by PIB Chennai

மேதகு மன்னர் அவர்களே!

நண்பர்களே, வணக்கம்!

ரைசினா பேச்சுவார்த்தை மனித வரலாற்றின் முக்கியமான நேரத்தில் நடக்கிறது. உலகளாவிய தொற்று, ஓராண்டுக்கும் மேலாக உலகை அழித்து வருகிறது. இதுபோன்ற உலகளாவிய தொற்று கடைசியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதுஅதன்பின், பல தொற்றுகளை மனித இனம் சந்தித்தாலும், கொவிட் 19 தொற்றை கையாள உலகம் இன்று தயார் நிலையில் இல்லை.

நமது விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர்.

வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது? அதை நம்மால் எப்படி குறைக்க முடியும்? தடுப்பூசி தயாரிப்பது எப்படி? தடுப்பூசியை எந்த விதத்தில் போடுவது? போன்ற கேள்விகளுக்கு பல தீர்வுகள் வந்துள்ளன.

இன்னும் பல தீர்வுகள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உலகளாவிய சிந்தனையாளராக மற்றும் தலைவர்களாக இன்னும் பல கேள்விகளை நாம் நமக்குள் கேட்க வேண்டும். இந்த தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஓராண்டுக்கும் மேலாக  நமது விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். உலகில் உள்ள அனைத்து அரசுகளும், தொற்றை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன.

இது இந்த அளவுக்கு ஏன் வந்தது? பொருளாதார வளர்ச்சி போட்டியில், மனித நலனுக்கான அக்கறை பின்தங்கிவிட்டது காரணமா?

போட்டி உலகில் ஒத்துழைப்பு உணர்வு மறக்கப்பட்டது காரணமா? இது போன்ற கேள்விகளுக்கான பதிலை சமீபத்தில் காண முடிந்ததுமுதலாம் மற்றும் 2ம் உலகப் போர்களின் கொடூரங்கள், புதிய உலக ஒழுங்கு முறை தோற்றத்தை கட்டாயமாக்கின.   2ம் உலகப் போர் முடிந்த பிறகு, அடுத்த சில சதாப்தங்களாக பல அமைப்புகள், நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இவைகள் ஒரே ஒரு கேள்விக்கு பதில் அளிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டிருந்தன.

3ம் உலகப் போரை தடுப்பது எப்படி? என்பதுதான் அந்த கேள்வி.

இந்தக் கேள்வி தவறானது என இன்று நான் உங்களிடம் தெரிவிக்கிறேன். ஏனென்றால், ஒரு நோயாளியின்  அடிப்படை காரணத்தை கண்டறியாமல், சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது போன்றதுதான் இதுஅல்லது இதை வேறுவிதமாக வைத்துக்கொள்ளவோம். கடைசி போரை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. அடுத்த போரை அல்லஉண்மையில் 3வது உலகப் போரை மனித இனம் சந்திக்கவில்லை. ஆனால், மக்கள் வாழ்வில் வன்முறை குறையவில்லைசண்டைகள், தீவிரவாத தாக்குதல்கள் எப்போதும் உள்ளன.

ஆகையால், எது சரியான கேள்வியாக இருக்க முடியும்?

அதில் இவற்றை சேர்க்கலாம்:

 பஞ்சம் மற்றும் பசியை நாம் ஏன் பெறுகிறோம்?

நமக்கு ஏன் வறுமை இருக்கிறது?

அல்லது மிகவும்  துரதிருஷ்டமாக

மனித இனத்தை அச்சுறுத்தும் பிரச்னைகளுக்கு தீர்வு காண நம்மால் ஏன் ஒத்துழைப்புடன் செயல்பட முடியாது?

நமது சிந்தனை இத்தகைய வழிகளில் இருந்திருந்தால், மிகவும் மாறுபட்ட தீர்வுகள் ஏற்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே!

 இப்போது கூட இது தாமதம் அல்ல. கடந்த 70 ஆண்டுகால தவறுகள், நமது எதிர்கால சிந்தனையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கொவிட்-19 தொற்று உலகை மாற்றியமைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அளித்துள்ளது. இன்றைய பிரச்னைகளுக்கும், நாளைய சவால்களை தீர்க்கும் முறையையும் நாம் உருவாக்க வேண்டும். ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்காக நாம் சிந்திக்க வேண்டும். நமது சிந்தனை மற்றும் செயல்பாட்டின் மையமாக மனிதநேயம் இருக்க வேண்டும்.

நண்பர்களே!

இந்த தொற்று காலத்தில், இந்தியா சொன்னபடி நடக்க முயற்சித்துள்ளதுதொற்றிலிருந்து 1.3 பில்லியன் குடிமக்களை காப்பாற்ற நாங்கள் முயற்சி எடுத்தோம். அதே நேரத்தில், மற்றவர்களின் தொற்று தடுப்பு முயற்சிகளுக்கும் உதவினோம்கடந்த ஆண்டு, மருந்துகள், கவச உடைகளை 150க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பகிர்ந்து கொண்டோம். நாடுகள் பாகுபாடின்றி நாம் ஒன்றிணைய வில்லையென்றால், மனித இனத்தால் இந்த தொற்றை தோற்கடிக்க முடியாது என்பதை நாங்கள் முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம். அதனால்தான், இந்தாண்டு பல தடைகள் இருந்த போதிலும், 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாங்கள் தடுப்பூசிகளை வழங்கினோம்

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில்,

எங்கள் அனுபவங்கள், நிபுணத்துவத்தை நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்.

நண்பர்களே!

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்ருவாண்டா அதிபர், டென்மார்க் பிரதமர்  ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதற்கு நன்றிஇந்த பேச்சுவார்த்தையில் பின்னர் கலந்து கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவருக்கும் நன்றி. பல சவால்களுக்கு இடையில் இந்தாண்டு ரைசினா பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்த அனைத்து அமைப்புகளுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்.

நன்றி. மிக்க நன்றி.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711594

----


(Release ID: 1711846) Visitor Counter : 185