பிரதமர் அலுவலகம்
ரைசினா பேச்சுவார்த்தை-2021
Posted On:
13 APR 2021 10:25PM by PIB Chennai
ருவாண்டா அதிபர் மேன்மைமிகு பால் ககாமே மற்றும் டென்மார்க் பிரதமர் மேன்மைமிகு மெட்டே பிரடெரிக்சென் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்ற காணொலி மூலம் நடைபெற்ற ரைசினா பேச்சுவர்த்தையின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
வெளியுறவு அமைச்சகம் மற்றும் தி அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படும் பெருமைமிகு நிகழ்ச்சியான ரைசினா பேச்சுவார்த்தையின் ஆறாவது பதிப்பு, 2021 ஏப்ரல் 13 முதல் 16 வரை காணொலி மூலம் நடைபெறும்.
"வைரல் உலகம்: தொற்று பரவல், தனித்து நிற்றல் மற்றும் கட்டுப்பாட்டை விட்டு விலகுதல்" என்பது இந்த வருடத்திற்கான மையக்கருவாகும்.
ஒட்டுமொத்த உலகத்தையும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாதித்து வரும் கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னணியில் மனித குல வரலாற்றின் மிக முக்கிய தருணத்தில் தற்போதைய ரைசினா பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் சில முக்கிய கேள்விகளுக்கான விடைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு சர்வதேச சமுதாயத்தை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அறிகுறிகளை மட்டுமல்லாது அடிப்படை காரணங்களையும் கண்டறிந்து சரி செய்யும் வகையில் சர்வதேச அமைப்புகள் தங்களை தாங்களே நிலைமைகளுக்கு ஏற்ப மேம்படுத்திக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
சிந்தனைகள் மற்றும் செயல்களின் மையமாக மனிதகுலத்தின் நன்மை இருக்க வேண்டும் என்றும் இன்றைய சிக்கல்கள் மற்றும் நாளைய சவால்களை எதிர்கொள்ளக்கூடிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் கொரோனோ எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். உள்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் வெளிநாடுகளுக்கு செய்யப்பட்டு வரும் உதவிகள் குறித்தும் அவர் விளக்கினார்.
பெருந்தொற்றால் விடுக்கப்பட்டுள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கு கூட்டு முயற்சிகள் தேவை என்றும் உலக நன்மைக்காக தனது வலிமைகளை இந்தியா பகிர்ந்துக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
***
(Release ID: 1711813)
Visitor Counter : 260
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam