பிரதமர் அலுவலகம்

இந்திய பல்கலைக் கழகங்கள் சங்கத்தின் 95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசிய கருத்தரங்கில் பிரதமர் உரை


டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பற்றிய நான்கு புத்தகங்கள் வெளியீடு

முன்னோக்கி செல்வதற்கும், இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வலுப்படுத்தவும் வலுவான அடித்தளம் அமைத்தார் பாபாசாகிப்: பிரதமர்

பாபாசாகிப்பின் தொலைநோக்கான சமவாய்ப்புகள் மற்றும் சம உரிமைகளை அரசு திட்டங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன: பிரதமர்

அனைத்து பல்கலைக்கழகங்களும் பன்முக ஒழுங்குடன் இருக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு தேவையானதை வழங்க வேண்டும் எனவும் நாங்கள் விரும்புகிறோம்: பிரதமர்

Posted On: 14 APR 2021 12:41PM by PIB Chennai

இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.   திரு கிஷோர் மக்வானா எழுதிய டாக்டர் பிஆர் அம்பேத்கர்  தொடர்பான நான்கு புத்தகங்களையும் அவர்  வெளியிட்டார்குஜராத் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அகமதாபாத்தில் உள்ள டாக்டர்  பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் இந்நிகழ்ச்சியை நடத்தியது.

நாட்டின் சார்பாக பாரத ரத்னா பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தை நாடு கொண்டாடும்போது, அவரது பிறந்த தினம் புதிய சக்தியை அளிப்பதாக பிரதமர் கூறினார்.

உலகில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருந்து வருகிறது எனவும், நமது நாகரீகம் மற்றும் வாழ்வில் ஜனநாயகம் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்றும் திரு மோடி வலியுறுத்தினார்இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வலுப்படுத்தும்போது, முன்னோக்கி செல்வதற்கும், வலுவான அடித்தளத்தை பாபாசாகிப் அமைத்தார் என பிரதமர் கூறினார்

பாபாசாகிப்பின் தத்துவம் குறித்து பேசிய பிரதமர் , ‘‘ அறிவு, சுயமரியாதை மற்றும் பணிவு  ஆகியவற்றை தனது 3 மதிப்பிற்குரிய தெய்வங்களாக டாக்டர் அம்பேத்கர் கருதினார்’’ என்றார்

சுய-மரியாதை என்பது அறிவுடன் வருகிறது மற்றும் ஒருவருக்கு தனது  உரிமையை அறியச் செய்கிறதுசம உரிமைகள்சமூக நல்லிணக்கம் மூலம், நாடு முன்னேறுகிறது

பாபாசாகிப் காட்டிய வழியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு நமது கல்வி முறைக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் உள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

தேசிய கல்விக்கொள்கை குறித்து பிரதமர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு மாணவருக்கும் சில திறமைகள் உள்ளன. இந்த திறமைகள் மாணவர் மற்றும் ஆசிரியர் முன் 3 கேள்விகளை முன்வைக்கின்றன. முதல் கேள்வி - அவர்களால் என்ன செய்ய முடியும்? 2வது கேள்வி - அவர்களுக்கு முறையாக கற்பிக்கப்பட்டால், அவர்களின் ஆற்றல் என்ன? 3வது கேள்வி - அவர்கள் என்ன செய்ய விரும்புகின்றனர்?

முதல் கேள்விக்கான விடை, மாணவர்களின்  உள் பலம்ஆனால், இந்த உள் பலத்துடன், நிறுவனத்தின் பலமும் சேர்க்கப்பட்டால், அவர்களின் வளர்ச்சி விரிவடையும் அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்ய முடியும்டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றி குறிப்பிட்ட  பிரதமர், ‘‘தேசியக் கல்வி கொள்கைகல்வி பற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணனின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றார்

இது தேசிய வளர்ச்சியில் மாணவர்களை பங்கேற்க வைக்கும் சக்தியை அளிக்கிறது என அவர் குறிப்பிட்டார்ஒட்டு மொத்த உலகையும் ஒரு பிரிவாக  வைத்திருப்பது மட்டும் அல்லாமல், இந்திய கல்வியின் தன்மையை மையமாக கொண்டு கல்வி மேலாண்மை மேற்கொள்ளப்பட வேண்டும்.

உருவாகிவரும் தற்சார்பு இந்தியாவில் திறமைக்கான தேவை அதிகரிப்பது பற்றி பேசிய பிரதமர், செயற்கை நுண்ணிறவு, இன்டர்நெட் விஷயங்கள், பிக் டேட்டா, 3டி பிரிண்டிங், காணொலி காட்சி, ரோபோடிக்ஸ், செல்போன் தொழில்நுட்பம், புவி தகவல்கள், ஸ்மார்ட் சுகாதார வசதி, பாதுகாப்பு துறை ஆகியவற்றில் இந்தியா, எதிர்கால மையமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.  

திறன் தேவையை எதிர்கொள்ள, நாட்டின் 3 பெருநகரங்களில்  இந்தியத் திறன் கழகங்கள்  ஏற்படுத்தப்படுகின்றனமும்பையில், இந்தியத் திறன் மையத்தின் முதல்  பிரிவு  ஏற்கனவே தொடங்கி விட்டது. 2018ம் ஆண்டு, எதிர்கால திறன் முயற்சிகள், நாஸ்காமுடன் தொடங்கப்பட்டது என பிரதமர் தெரிவித்தார்

அனைத்து பல்கலைக்கழகங்களும் பன்முக ஒழுங்குடனும், மாணவர்களின் தேவைக்கேற்பவும் செயல்பட வேண்டும் என விரும்புகிறோம்இந்த இலக்குக்காக துணை வேந்தர்கள் பணியாற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் மீது பாபாசாகிப் வைத்திருந்த நம்பிக்கையை திரு மோடி விவரித்தார்.   ஜன்தன் கணக்குகள் போன்ற திட்டங்கள், ஒவ்வொருவருக்குமான நிதி உள்ளடக்கத்துக்கு வழிவகுக்கிறது என்றும், நேரடி பண பரிமாற்றம் மூலம் அவர்களின் வங்கி கணக்குக்கே நேரடியாக பணம் செல்கிறது என்றும் பிரதமர்  கூறினார்.  

பாபாசாகிப்பின் தகவலை ஒவ்வொருவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நாட்டின் உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார்இந்த நோக்கில் பாபாசாகிப் வாழ்க்கை தொடர்பான முக்கிய இடங்கள் பஞ்சதீர்த்தங்களாக மேம்படுத்தப்படு கின்றனஜல் ஜீவன் திட்டம், இலவச வீடு, இலவச மின்சாரம், தொற்று சமயத்தில் உதவி போன்ற நடவடிக்கைகள்  மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் ஆகியவை பாபாசாகிப்பின் கனவை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.

திரு கிஷோர் மக்வானா எழுதிய பாபா சாகிப் பீம்ராவ் அம்பேத்கர் வாழ்க்கை அடிப்படையிலான  கீழ்கண்ட 4 புத்தகங்களையும் பிரதமர் வெளியிட்டார்

டாக்டர். அம்பேத்கர் ஜீவன் தர்ஷன்,

டாக்டர். அம்பேத்கர் வியாக்தி தர்ஷன்,

டாக்டர். அம்பேத்கர் ராஷ்ட்ர  தர்ஷன்       மற்றும்

டாக்டர். அம்பேத்கர் ஆயம் தர்ஷன்

இந்த புத்தகங்கள், நவீன மதிப்பான புத்தகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவானது அல்ல என்றும், இது பாபாசாகிப்பின் உலகளாவிய பார்வையை தெரிவிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்இந்த புத்தகங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களால் பரவலாக படிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

--------



(Release ID: 1711786) Visitor Counter : 152