பிரதமர் அலுவலகம்

செசல்ஸ் நாட்டில் இந்திய திட்டங்கள் தொடக்கம்: காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 07 APR 2021 5:35PM by PIB Chennai

செசல்ஸ் நாட்டில் இந்திய திட்டங்கள் பலவற்றை தொடங்கி வைக்கும் காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, செசல்ஸ் அதிபர் மேதகு வேவல் ராம்கலாவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த உயர்நிலைக் கூட்டத்தில் கீழ்கண்ட திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன:

1) செசல்ஸில் புதிய மாஜிஸ்திரேட் நீதிமன்ற கட்டிடம் மின்னணு முறையில் கூட்டாக தொடங்கி வைக்கப்படுகிறது.

2) செசல்ஸ் கடலோர பாதுகாப்பு படையிடம் அதிவிரைவு ரோந்து படகு ஒப்படைக்கப்படுகிறது.

3) 1 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி மையம் ஒப்படைக்கப்படுகிறது.

4) 10 சமுதாய மேம்பாட்டு திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.

செசல்ஸ் தலைநகரான விக்டோரியாவில் கட்டப்பட்டுள்ள புதிய மாஜிஸ்திரேட் நீதிமன்ற கட்டிடம், இந்திய நிதியுதவியுடன் செசல்ஸ் நாட்டில் கட்டப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்பு திட்டம்.  நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட இந்த நீதிமன்றம், செசல்ஸ் நாட்டின் நீதித்துறை திறனை அதிகரிக்கும். இது செசல்ஸ் மக்களுக்கு சிறந்த நீதித்துறை சேவைகள் கிடைக்க உதவும். 

செசல்ஸ் நாட்டின் கடற்சார் கண்காணிப்பை வலுப்படுத்தும் இந்திய நிதியுதவி திட்டத்தின் கீழ், கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட 50 மீட்டர் நீளமுள்ள அதிவிரைவு ரோந்து படகு செசல்ஸ் நாட்டுக்கு அன்பளிப்பாக வழங்கப்படுகிறது. இதில் நவீன வசதிகள் உள்ளன.

சூரிய மின்சக்தி அனைவருக்கும் கிடைக்க செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசின் நிதியுதவியுடன், செசல்ஸ் நாட்டின் ரோமைன்வில்லி தீவில் 1 மெகா வாட் திறனுள்ள சூரியசக்தி மின்உற்பத்தி நிலையம் அமைக்ப்பட்டுள்ளது.

இந்த காணொலி நிகழ்ச்சியில், உள்ளூர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்திய தூதரகம் அமல்படுத்தும், 10 உயர்ந்த அளவிலான சமூக மேம்பாட்டு திட்டங்களும் ஒப்படைக்கப்படுகின்றன.

அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ - என்ற பிரதமரின் சாகர்தொலைநோக்கு திட்டத்தில் செசல்ஸ் முக்கிய இடத்தில் உள்ளது. இந்த முக்கிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுவது, செசல்ஸின் உள்கட்டமைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தேவைகளை நிவர்த்தி செய்வதில், இந்தியா முக்கிய நட்பு நாடாக இருப்பதை நிரூபிப்பதோடு, இந்திய-செசல்ஸ் மக்களிடையேயான ஆழமான நட்புறவுக்கு சான்றாகவும் உள்ளது.

*****************



(Release ID: 1710211) Visitor Counter : 276