சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகள் எண்ணிக்கை 8.7 கோடியைக் கடந்தது: அமெரிக்காவை மிஞ்சியது இந்தியா
Posted On:
07 APR 2021 11:46AM by PIB Chennai
நாட்டில் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 8.70 கோடியைக் கடந்தது.
இன்று காலை 7 மணி வரை 8,70,77,474 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 33 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன.
81வது நாளான நேற்று 33,37,601 தடுப்பூசிகள் போடப்பட்டன.
குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, உலகில் வேகமாக தடுப்பூசிகள் போடும் நாடுகளில், நாளொன்றுக்கு சராசரியாக 30,93,861 தடுப்பூசிகள் என்ற அளவுடன் இந்தியா அமெரிக்காவை மிஞ்சிவிட்டது.
நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.70 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், தில்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் அதிகபட்ச அளவாக 55,469 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 8,43,473. தினசரி கொவிட் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. கொவிட்-19 நிலவரம், தடுப்பூசி நிலவரம் குறித்து பிரதமர் கடந்த 4ம் தேதி உயர்நிலைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.
கொவிட் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் காணொலி காட்சி மூலம் நடந்த உயர்நிலை ஆய்வு கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நேற்று தலைமை தாங்கினார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச செயலாளர்களுடன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு கூட்டத்தை தவறாமல் நடத்தி வருகிறார். மகாராஷ்டிரா, பஞ்சாம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவ, 50 உயர் நிலைக் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த குழுக்கள் 3 முதல் 5 நாட்களுக்கு இந்த மாநிலங்களில் இருக்கும்.
நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,17,92,135-ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 59,856 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1710027
******
(Release ID: 1710090)
Visitor Counter : 243
Read this release in:
Urdu
,
English
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam