சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கடந்த 24 மணி நேரத்தில் 36.7 லட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் போட்டு இந்தியா சாதனை

Posted On: 02 APR 2021 12:07PM by PIB Chennai

கடந்த 24 மணி நேரத்தில் 36.7 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போட்டு இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

76-வது நாளான நேற்று 36,71,242 தடுப்பூசிகள் போடப்பட்டனமொத்தத்தில் இன்று காலை 7 மணி வரை 6.87 கோடி (6,87,89,138) தடுப்பூசிகள் போடப்பட்டன.

மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 81.25 சதவீதம் பேர் மேற்கண்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 43,183 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 6,14,696- எட்டியுள்ளது.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,15,25,039 -ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 50,356 பேர் குணமடைந்துள்ளனர். 469 பேர் உயிரழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1709176

----



(Release ID: 1709232) Visitor Counter : 192