சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தினசரி கொவிட் புதிய பாதிப்புகள் : 80% மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசத்தில் பதிவு

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAR 2021 11:12AM by PIB Chennai

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் அன்றாட  கொவிட் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 80.5% பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 46,951 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,535 பேரும், பஞ்சாபில் 2,644 பேரும், கேரளாவில் 1,875 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 3,34,646 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 2.87 சதவீதமாகும்.

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளவர்களின்  எண்ணிக்கை 4.5 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 7,33,597 முகாம்களில் 4,50,65,998 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 77,86,205 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 48,81,954 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 80,95,711 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 26,09,742 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 37,21,455 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 1,79,70,931 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,51,468 ஆக (95.75%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21,180 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 212 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1706531

******

(Release ID: 1706531)


(வெளியீட்டு அடையாள எண்: 1706581) வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam